/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பெரியமணலியில் உழவரைத்தேடி வேளாண்மை திட்டம் துவக்கம்
/
பெரியமணலியில் உழவரைத்தேடி வேளாண்மை திட்டம் துவக்கம்
பெரியமணலியில் உழவரைத்தேடி வேளாண்மை திட்டம் துவக்கம்
பெரியமணலியில் உழவரைத்தேடி வேளாண்மை திட்டம் துவக்கம்
ADDED : மே 30, 2025 01:25 AM
எலச்சிபாளையம் ;பெரியமணலி கிராமத்தில், உழவரைத்தேடி வேளாண்மை-உழவர்நலத்துறை திட்டம் தொடங்கப்பட்டது.உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை திட்டத்தை, நேற்று முதல்வர் ஸ்டாலின் காணொலியில் துவக்கி வைத்தார். இதன் மூலம், வேளாண்மை விரிவாக்க சேவைகள் உழவர்களுக்கு அவர்களுடைய கிராமத்திற்கு சென்றே வழங்கப்பட உள்ளது.
மேலும், அரசு திட்டங்கள் வெகுவிரைவாக உழவர்களை சென்றடைய, எலச்சிபாளையம் வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலிலும், 15 நாட்களுக்கு ஒருமுறை அதாவதுஇரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமை முகாம் நடத்தப்பட உள்ளது.
முதல் கட்டமாக நேற்று பெரியமணலி கிராமத்தில், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமாலா மற்றும் முசிறி கிராமத்தில் தோட்டக்கலை உதவி இயக்குனர் கார்த்திகா தலைமையில் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
திட்டத்தின் நோக்கம் குறித்தும், வேளாண்மைத்துறை மானிய திட்டங்கள் குறித்தும் வேளாண்மை உதவி இயக்குனர் விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். வேளாண்மை அலுவலர் அனிதா, வேளாண்மை உதவி அலுவலர்கள் ராஜதுரை, சக்தி வேல், வேளாண்மை உதவி அலுவலர் பாலலிங்கேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர். விழாவில், விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டன.