/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பச்சை பயரில் விதை நேர்த்தி செய்து விதைக்க விவசாயிகளுக்கு யோசனை
/
பச்சை பயரில் விதை நேர்த்தி செய்து விதைக்க விவசாயிகளுக்கு யோசனை
பச்சை பயரில் விதை நேர்த்தி செய்து விதைக்க விவசாயிகளுக்கு யோசனை
பச்சை பயரில் விதை நேர்த்தி செய்து விதைக்க விவசாயிகளுக்கு யோசனை
ADDED : டிச 18, 2024 01:34 AM
நாமகிரிப்பேட்டை, டிச. 18-
'பச்சை பயரில் விதை நேர்த்தி செய்து விதைக்க, நாமகிரிப்பேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குனர் உமா மகேஸ்வரி, விவசாயிகளுக்கு யோசனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பச்சை பயரில் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். ஒரு கிலோ விதைக்கு, 2 கிராம் கார்பன்டாசிம் அல்லது 4 கிராம் ட்ரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதை நேர்த்தி செய்ய, ஒரு ஹெக்டேருக்கு, 200 கிராம் பாக்கெட் ரைசோபியம் மற்றும் 200 கிராம் பாக்கெட், பாஸ்போ பாக்டீரியா, 200 கிராம் பாக்கெட் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தயாரித்த பி.ஜி.பி.ஆர்.,-ஐ அரிசிக்கஞ்சியுடன் கலந்து உபயோகிக்கவும்.
விதை நேர்த்தி செய்யவில்லை என்றால் பாஸ்போ பாக்டீரியா, 10 பாக்கெட் மற்றும் 10 பாக்கெட் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தயாரித்த பி.ஜி.பி.ஆர்.,-ஐ, 25 கிலோ தொழுவுரம் மற்றும், 25 கிலோ மணலில் கலந்து விதைக்கவும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.