/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வட்டார தொழில் நுட்ப வல்லுனர்களுடன் விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம்
/
வட்டார தொழில் நுட்ப வல்லுனர்களுடன் விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம்
வட்டார தொழில் நுட்ப வல்லுனர்களுடன் விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம்
வட்டார தொழில் நுட்ப வல்லுனர்களுடன் விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம்
ADDED : ஜன 26, 2024 10:29 AM
நாமக்கல்: நாமக்கல் வட்டார தொழில் நுட்ப வல்லுனர்கள் குழு, வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நடந்தது.
தொழில் நுட்ப வல்லுனர்கள் குழு திட்ட ஒருங்கிணைப்பாளர் சித்ரா முன்னிலை வகித்தார். விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். விவசாயிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், உழவனின் நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அட்மா திட்ட செயல்பாடுகள், விவசாயிகளுக்கு சென்றடையும் தொழில் நுட்பங்கள் குறித்தும் பயிற்சி, கண்டுணர்வு பயணம், செயல்
விளக்கம், பண்ணைப்பள்ளி திட்டப்பணிகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
வேளாண், தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, வேளாண்மை பொறியியல், பட்டு வளர்ச்சி, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை மூலம் வழங்கப்படும் மானியங்கள், தடுப்பூசி முகாம்கள், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள், தடுப்பு முறைகள், உழவர் சந்தை, சேமிப்பு கிடங்கு குறித்தும் விளக்கினர்.
வட்டார வேளாண்மை அலுவலர் மோகன், கால்நடை உதவி மருத்துவர் முருகேசன், தோட்டக்கலைத்துறை அலுவலர் பூர்ணிமா, பட்டு உதவி ஆய்வாளர் சாந்தி, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் கங்காதாரன் ஆகியோர் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர். அட்மா மேலாளர் ரமேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் அட்மா திட்ட பணி முன்னேற்றம் குறித்து பேசினர்.

