sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வண்டல் மண் எடுக்க விவசாயிகள், மண்பாண்டதொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்

/

வண்டல் மண் எடுக்க விவசாயிகள், மண்பாண்டதொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்

வண்டல் மண் எடுக்க விவசாயிகள், மண்பாண்டதொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்

வண்டல் மண் எடுக்க விவசாயிகள், மண்பாண்டதொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்


ADDED : ஏப் 18, 2025 01:52 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:'நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள், 101 நீர் நிலைகளில் இருந்து இலவசமாக வண்டல் மண், களிமண் எடுத்துச்செல்ல விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ஏற்கனவே பொதுப்பணித்துறை, ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள, 170 ஏரிகள், குளங்கள், நீர்நிலைகளிலிருந்து இலவசமாக வண்டல் மண், களிமண் எடுத்துச்செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளளது. இதுவரை இத்திட்டத்தில், 3,512 விவசாயிகள், பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்.

தற்போது, ஊரக வளர்ச்சித்துறை, ஊராட்சித்துறை மற்றும் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள, மேலும், 101 அரசு புறம்போக்கு நீர் நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண், களிமண் இலவசமாக எடுத்துச்செல்ல, விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

நஞ்சை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஒரு ஏக்கருக்கு, 75 கனமீட்டர் வீதம், 25 யூனிட் வரை வழங்கப்படும். புஞ்சை நிலம் வைத்துள்ளவர்களுக்கு,- 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ஏக்கருக்கு, 90 கனமீட்டர் வீதம், 30 யூனிட் வரை அனுமதி வழங்கப்படும். மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு, 60 க.மீட்டர் அல்லது 20 யூனிட் வரை வழங்கப்படும். வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள், சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ.,விடம் சான்று பெற்று, tnesevai.tn.gov.in என்ற வெப்சைட் மூலம் சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் விண்ணப்பித்து, அனுமதி பெற்று, 30 நாட்களுக்குள் வண்டல் மண் எடுத்துக்கொள்ள வேண்டும். வண்டல்மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நீர்நிலைகள் குறித்த விபரங்களை சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகங்களில் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us