/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நெல்லுக்கு ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 அறிவிக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை
/
நெல்லுக்கு ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 அறிவிக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை
நெல்லுக்கு ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 அறிவிக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை
நெல்லுக்கு ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 அறிவிக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை
ADDED : செப் 02, 2025 01:15 AM
நாமக்கல்;'தமிழக அரசு, நெல்லுக்கு ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு, 3,500 ரூபாய் அறிவிக்க வேண்டும்' என, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு, விவசாயிகளிடம் இருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யும் நெல்லுக்கு, நேற்று முதல், ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு, சாதாரண நெல்லுக்கு, 2,500 ரூபாய், சன்னரக நெல்லுக்கு, 2,545 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து உத்தரவு வெளியிட்டுள்ளது. 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., தேர்தல் வாக்குறுதியான, 'நெல்லுக்கு உண்டான ஆதார விலையை, குவிண்டால் ஒன்றுக்கு, 2,500 ரூபாய் வழங்கப்படும்' என, அறிவித்தது. ஆனால், தி.மு.க., ஆட்சி பொறுப்பிற்கு வந்து, நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த பின், இந்த விலையை அறிவித்துள்ளது.
ஆனால், நான்கு ஆண்டுகளில் நெல் உற்பத்தி செய்வதற்கு உண்டான உரம், பூச்சி மருந்து, உழவு கூலி, நாற்று நடவு, வேலை ஆட்கள் கூலி மற்றும் இதர செலவினங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது.
தமிழக அரசு அறிவித்துள்ள இந்த விலை, தமிழக விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை இல்லை. அதனால், தமிழக விவசாயிகளின் நலன் கருதி, உற்பத்தி செலவினங்களை கணக்கீடு செய்து, நெல் குவிண்டால் ஒன்றுக்கு, ஆதார விலையாக, 3,500 ரூபாய் என உயர்த்தி அறிவிக்க கோரி, பலமுறை கோரிக்கை வைத்தோம். அவற்றை நிறைவேற்றவில்லை.தற்போது அறிவித்துள்ள விலையை மாற்றி, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நெல்லுக்கு உண்டான ஆதார விலையை, 3,500 ரூபாயாக உயர்த்தி அறிவிக்க வேண்டும்.