/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
30ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
/
30ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ADDED : ஜன 27, 2024 04:09 AM
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜனவரி மாதத்திற்கான, விவசாயிகள் குறைதீர் கூட்டம், நாமக்கல் உட்கோட்டத்தில் உள்ள நாமக்கல், மோகனுார், சேந்தமங்கலம், ராசிபுரம் மற்றும் கொல்லிமலை தாலுகா பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் வரும், 30ம் தேதி காலை, 10:30 மணிக்கு நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும். ஆர்.டி.ஓ., சரவணன் தலைமை வகித்து, விவசாயிகளிடம் இருந்து மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிகிறார்.
இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தங்களது பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விபரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

