/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரளி பூ விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
/
அரளி பூ விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜூலை 31, 2025 01:59 AM
வெண்ணந்துார், வெண்ணந்துார் ஒன்றியத்துக்குட்பட்ட பொன்பரப்பிப்பட்டி, கோம்பைக்காடு, குட்டலாடம்பட்டி, தேங்கல்பாளையம்,
அத்தனுார், ஆர்.புதுப்பாளையம், கல்லாங்குளம் மற்றும் கட்டனாச்சம்பட்டி பகுதியில் அரளி பூ சாகுபடி அதிகளவில் நடக்கிறது.
இங்கு அறுவடை செய்யும் பூக்களை சேலம், நாமக்கல் பகுதிகளில் செயல்படும் பூ சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். சில வாரங்களுக்கு முன் சந்தையில், ஒரு கிலோ அரளி, 40 ரூபாய் முதல், 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தற்போது, ஆடி மாதம் தொடங்கி உள்ளதால், சேலம், நாமக்கல் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் நடப்பதால், பூக்கள் தேவையும் அதிகரித்துள்ளது. அதனால், தற்போது, ஒரு கிலோ, 150 ரூபாய்க்கு விற்பனை
செய்யப்படுகிறது. பூ விலை அதிகரிப்பால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.