/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பச்சை மிளகு விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
/
பச்சை மிளகு விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : மே 10, 2025 01:13 AM
சேந்தமங்கலம், கொல்லிமலையில் மிளகு அறுவடை பணி நடந்து வரும் நிலையில், நல்ல விலைக்கு விற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை மூலிகைகள் நிறைந்த மலையாக உள்ளது. இங்கு, அன்னாசி, பலா, வாழை உள்ளிட்ட பழங்கள் அதிகளவில் பயிரிடப்படுகிறது.
இதேபோல், காபி, மிளகு ஆகியவை பயிரிடப்பட்டு வருகிறது. இங்குள்ள காரம் மிகுந்த கொல்லிமலை மிளகு, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த மாசி மாதம் முதல் மிளகு அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது, 90 சதவீதம் மிளகு அறுவடை பணி முடிந்துள்ள நிலையில், கடந்த, ஒரு மாதமாக கொல்லிமலையில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், அறுவடை செய்யப்படும் மிளகை விவசாயிகள் காய வைத்து விற்பனை செய்ய வழியின்றி, பச்சையாகவே விற்பனை செய்து வருகின்றனர். கடந்தாண்டு ஒரு கிலோ பச்சை மிளகு, 120 ரூபாய் முதல், 150 ரூபாய் வரை விற்ற நிலையில், இந்தாண்டு விலை உயர்ந்து, 200 ரூபாய் முதல், 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.