/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெற்றிலை விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
/
வெற்றிலை விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : செப் 22, 2024 06:25 AM
ப.வேலுார்: ப.வேலுார் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில், 3,000 ஏக்கருக்கும் அதிகமாக வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு கற்பூரி, வெள்ளைமார் வெற்றிலை ரகம் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. அறுவடை செய்யப்பட்ட வெற்றிலைகள், ப.வேலுாரில் உள்ள, தினசரி ஏலமண்டியில் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வாரம், 104 கவுளி கொண்ட இளம்பயிர் வெள்ளைக்கொடி ஒரு சுமை, 3,000 ரூபாய், கற்பூரி வெற்றிலை, 1,000 ரூபாய்; முதிகால் வெள்ளைக்கொடி, 1,500 ரூபாய், முதிகால் கற்பூரி, 500 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று, 104 கவுளி கொண்ட இளங்கால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை, 6,000 ரூபாய், இளங்கால் கற்பூரி, 4,000 ரூபாய், முதிகால் வெள்ளைக்கொடி, 3,500 ரூபாய், முதிகால் கற்பூரி, 1,800 ரூபாய்க்கு விற்பனையானது. ஏல மண்டிக்கு வரத்து குறைவால், வெற்றிலை விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.