/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தென்னையில் கூன் வண்டு பாதிப்பு தவிர்க்க விவசாயிகளுக்கு யோசனை
/
தென்னையில் கூன் வண்டு பாதிப்பு தவிர்க்க விவசாயிகளுக்கு யோசனை
தென்னையில் கூன் வண்டு பாதிப்பு தவிர்க்க விவசாயிகளுக்கு யோசனை
தென்னையில் கூன் வண்டு பாதிப்பு தவிர்க்க விவசாயிகளுக்கு யோசனை
ADDED : செப் 16, 2024 02:41 AM
நாமகிரிப்பேட்டை: தென்னையில் கூன் வண்டு பாதிப்பை தவிர்க்க, வேளாண்துறை விவசாயிகளுக்கு யோசனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, நாமகிரிப்பேட்டை வட்டார வேளாண் மையம் சார்பில் வெளியிட்ட அறிக்கை:நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் உள்ள தென்னந் தோப்புகளில் அதிகளவு கூன் வண்டு பாதிப்பு தென்படுகிறது.
தென்னையை தாக்கும் சிவப்பு கூன் வண்டுகளை -அழிக்க, கரும்புச்சாறு, 2.5 லிட்டர், ஈஸ்ட் மாத்திரை, 5 கி., 5 மி.லி., அசிட்டிக் அமிலம் அல்லது அன்னாசியை கரும்புச்சாறுடன் ஊற வைக்க வேண்டும். நீளவாக்கில் வெட்டப்பட்ட ஓலை மட்டை துண்டுகள் போடப்பட்ட பானைகளில் ஊறலை ஏக்கருக்கு, 30 வீதம் தென்னந்தோப்பில் வைத்தால், கூன் வண்டுகளை கவர்ந்து அழிக்க முடியும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.