/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற அழைப்பு: கலெக்டர்
/
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற அழைப்பு: கலெக்டர்
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற அழைப்பு: கலெக்டர்
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற அழைப்பு: கலெக்டர்
ADDED : ஜூலை 28, 2025 04:05 AM
நாமக்கல்: 'அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்-டத்தில், விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம்' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
கிராம பஞ்.,களில் ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சி பெற்று தன்-னிறைவு பெற்ற கிராமங்களாக மாற்றிடவும், தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரவும், வேளாண் - உழவர் நலத்துறை மற்றும் உழவர் நலன் சார்ந்த பிற துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைக்க, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், 2021-22 முதல் செயல்படுத்தப்பட்டு வருகி-றது.நாமக்கல் மாவட்டத்தில், 2025-26ம் ஆண்டிற்கு, 58 கிராம பஞ்.,கள் தேர்வு செய்யப்பட்டு, அனைத்து கிராம ஒருங்கி-ணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், தரிசு நிலமுடைய, 8 அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் குழுவாக ஒன்று சேர்ந்து, குறைந்த-பட்சம், 10 ஏக்கர் தரிசு நிலத்தை தொகுப்பாக ஏற்படுத்தி, அத்-தொகுப்பில் நீராதாரங்கள் மற்றும் நுண்ணீர்பாசனம் அமைத்து சாகுபடிக்கு கொண்டு வர வழிவகை செய்யப்பட்டுள்ளது. தரிசாக உள்ள தனிப்பட்ட விவசாயிகளின் நிலத்தில் இருக்கும் முட்புதர்-களை அகற்றி, நிலத்தை சமன் செய்து உழுவதற்கு ஹெக்டேர் ஒன்றுக்கு, 50 சதவீதம் மானியம் அல்லது 9,600 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
வரப்புகளில் பயறு சாகுபடியை ஊக்குவிப்பதற்காக, ஒரு ஹெக்-டேருக்கு, 5 கிலோ பயறு விதைகளுக்கு, 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக, 300 ரூபாய் வரை மானியம் வழங்கப்ப-டுகிறது. நன்மை பயக்கும் நுண்ணுயிர்களை பெருக்கி மண்வ-ளத்தை மேம்படுத்துவதற்கான செயல் விளக்க திடல்கள் அமைக்க ஹெக்டேர் ஒன்றுக்கு அதிகபட்சமாக, 450 ரூபாய் வரை மானியமாக வழங்கப்படுகிறது.
விசைத் தெளிப்பான் அல்லது பேட்டரியால் இயங்கும் தெளிப்-பான்கள், 50 சதவீதம் மானியத்தில் அதிகபட்சமாக, 3,000 ரூபாய் வரை மானியமாக வழங்கப்படுகிறது. வேளாண் பெரு-மக்கள், நடப்பு, 2025-26ம் ஆண்டு அனைத்து கிராம ஒருங்கி-ணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பங்கு பெற்று பயன் பெறலாம். கூடுதல் விபரங்களுக்கு, தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்-ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.