/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தண்ணீர் வரத்தால் சாகுபடிக்கு தயாராகி வரும் விவசாயிகள்
/
தண்ணீர் வரத்தால் சாகுபடிக்கு தயாராகி வரும் விவசாயிகள்
தண்ணீர் வரத்தால் சாகுபடிக்கு தயாராகி வரும் விவசாயிகள்
தண்ணீர் வரத்தால் சாகுபடிக்கு தயாராகி வரும் விவசாயிகள்
ADDED : ஜூலை 11, 2025 01:54 AM
பள்ளிப்பாளையம், மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில், தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பள்ளிப்பாளையம் வட்டாரத்தில் சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
பள்ளிப்பாளையம் பகுதியில் கலியனுார், எலந்த குட்டை, சமயசங்கிலி, மோளகவுண்டம்பாளையம், சின்னார்பாளையம், எளையாம்பாளையம் உள்ளிட்ட, 10 கி.மீ., சுற்றளவுக்கு மேட்டூர் கிழக்குகரை வாய்க்கால் செல்கிறது.
கடந்த 1ம் தேதி, மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது வாய்க்காலில் தண்ணீர் வருவதால், பள்ளிப்பாளையம் சுற்று வட்டார விவசாயிகள் சாகுபடி செய்ய தயாராகி வருகின்றனர்.
இது குறித்து, மோளகவுண்டம்பாளையம் விவசாயி பன்னீர்செல்வம் கூறுகையில்,'' மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில் தற்போது பாசனத்திற்கு தண்ணீர் வருகிறது. வாய்க்கால் தண்ணீரை பயன்படுத்தி, பள்ளிப்பாளையம் வட்டாரத்தில், 5,000 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறும். ஓரிரு வாரங்களில் நெல் சாகுபடி பணியை விவசாயிகள் துவக்கி விடுவர்,'' என்றார்.