/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
யு-டியூப் சேனலை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
/
யு-டியூப் சேனலை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 26, 2024 02:43 AM
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த குட்டலாடம்பட்டி பஞ்சாயத்தில், 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பஞ்.,க்கு சொந்தமாக கலை-யரங்கம் உள்ளது.
அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், தங்களது விளை நிலத்தில் பறிக்கும் பூக்களை, இந்த கலையரங்கிற்கு கொண்டு வந்து வியா-பாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.
இதை, நேற்று முன்தினம் வீடியோ எடுத்த யு-டியூப் சேனல், 'ஊராட்சி மன்ற தலைவி மாதேஸ்வரி, கலையரங்கத்தை வாட-கைக்கு விட்டு வசூல் செய்வதாக' செய்தி வெளியிட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் கோபம-டைந்த விவசாயிகள், பொதுமக்கள், நேற்று கலையரங்கில் கூடி, யு-டியூப் சேனலை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து, ராசிபுரம் போலீசில் புகாரளித்தனர்.
இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த சிவஜோதி என்பவர் கூறியதா-வது: குட்டலாடம்பட்டி கிராமத்தை சுற்றியுள்ள விவசாயிகள், தங்களது நிலங்களில் விளைவிக்கப்படும் அரளி பூக்களை கலை-யரங்கில் வைத்து விடுவர். அவ்வழியாக செல்லும் வியாபாரிகள் வண்டியில் பூக்களை எடுத்து சென்று விடுவர். இதற்காக யாரும், யாருக்கும் பணம் தரவில்லை. ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்று தான், இதை விவசாயிகள் செய்து வருகின்றனர். ஆனால், வாடகை வசூல் செய்வதாக பொய்யாக செய்தி வெளியிட்டுள்-ளனர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

