/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தாலுகா ஆபீசில் ஜப்தி நடவடிக்கை: தொடரும் விவசாயிகள் போராட்டம்
/
தாலுகா ஆபீசில் ஜப்தி நடவடிக்கை: தொடரும் விவசாயிகள் போராட்டம்
தாலுகா ஆபீசில் ஜப்தி நடவடிக்கை: தொடரும் விவசாயிகள் போராட்டம்
தாலுகா ஆபீசில் ஜப்தி நடவடிக்கை: தொடரும் விவசாயிகள் போராட்டம்
ADDED : பிப் 13, 2024 12:20 PM
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த தேங்கல்பாளையம், அத்தனுார், நெ.3 குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த, 1999ல் ரயில் பாதை அமைப்பதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. ஆனால், இதுவரை கையகப்படுத்தப்பட்ட, 60 ஏக்கர் நிலத்திற்கு இழப்பீடு கிடைக்காததால், 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
விசாரணை நடத்திய நீதிபதி, இழப்பீடு வழங்க சில ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டார். இந்நிலையில், விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்காததால், ராசிபுரம் தாசில்தார் அலுவலகம், ரயில்வே நிலைய அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து, ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள், ராசிபுரம் ரயில் நிலையம், தாசில்தார் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
துணை தாசில்தார் விஜயலட்சுமி, 'நீதிமன்றத்தில் அரசு வக்கீல், 'மெமோ' கொடுத்துள்ளதாகவும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அலுவலகத்தில் எவ்வித பொருட்களையும் எடுக்கக் கூடாது' என தெரிவித்ததையடுத்து, விவசாயிகள், நீதிமன்ற ஊழியர்கள் அங்கிருந்து சென்றனர். பின், ரயில்வே அலுவலகத்தை ஜப்தி செய்ய முயன்றனர். அங்கு, ரயில்வே அதிகாரிகள் கால அவகாசம் கேட்டதால், நீதிமன்ற ஊழியர்கள், விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
விவசாயிகள் இதுபோல், பல ஆண்டுகளாக ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதும், ஒவ்வொரு முறையும் வெவ்வேறு காரணங்களால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதும் வாடிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.