/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காவிரியில் கலந்து வீணாகும் திருமணிமுத்தாறு ஏரி, குளங்களில் சேமிக்க விவசாயிகள் கோரிக்கை
/
காவிரியில் கலந்து வீணாகும் திருமணிமுத்தாறு ஏரி, குளங்களில் சேமிக்க விவசாயிகள் கோரிக்கை
காவிரியில் கலந்து வீணாகும் திருமணிமுத்தாறு ஏரி, குளங்களில் சேமிக்க விவசாயிகள் கோரிக்கை
காவிரியில் கலந்து வீணாகும் திருமணிமுத்தாறு ஏரி, குளங்களில் சேமிக்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : அக் 10, 2024 02:01 AM
காவிரியில் கலந்து வீணாகும் திருமணிமுத்தாறு
ஏரி, குளங்களில் சேமிக்க விவசாயிகள் கோரிக்கை
ப.வேலுார், அக். 10--
காவிரியில் கலந்து வீணாகும் திருமணிமுத்தாறு தண்ணீரை, ஏரி, குளங்களில் நிரப்பி, நிலத்தடி நீர்மட்டம் உயர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே இடும்பன் குளம் ஏரி, 400 ஏக்கரில் அமைந்துள்ளது. சேலம் மாவட்டம், ஏற்காடு சேர்வராயன்மலையில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு, சேலம், பூலாவரி, ஆட்டையாம்பட்டி, நாமக்கல் மாவட்டம் வெண்ணந்துார், கொன்னையாரு, மாணிக்கம்பாளையம், பரமத்தி வழியாக இடும்பன் குளம் ஏரியை அடைகிறது.
அங்கிருந்து, ப.வேலுார் நன்செய் இடையாறு காவிரி ஆற்றில் சங்கமிக்கிறது. இடும்பன் குளம் ஏரி நீரை பயன்படுத்தி, நுாற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கோடைகாலத்தில் தண்ணீரின்றி வற்றிவிடுவதால், சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, பாசன பரப்பளவும் குறைந்து விடுகிறது. இது, விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து, நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருந்தால், பயிர் சாகுபடியும் தடையின்றி மேற்கொள்ளப்படும். சுற்று வட்டார மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைத்து, அவர்களது பொருளாதாரம் உயரும்.
இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: இடும்பன் குளம் ஏரி நிரம்பி, அதன் உபரி நீர், திருமணி முத்தாறு வழியாக, நன்செய் இடையாறு காவிரி ஆற்றில் கலந்து வீணாகிறது. அவற்றை தவிர்த்து, திருமணி முத்தாறு பாய்ந்தோடும் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீரை திருப்பி நிரப்ப வேண்டும். அதன் மூலம், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், பாசனத்துக்கும் தடையின்றி தண்ணீர் கிடைக்கும். மக்கள் பயன்பாட்டுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. மேலும், இடும்பன் குளம் துார்வார வேண்டும். அதிலுள்ள கருவேல மரங்களை அகற்றினாலே, கடல்போல் காட்சியளிக்கும். அவற்றை செயல்படுத்த, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

