/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி வழங்கணும் அமைச்சரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்
/
ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி வழங்கணும் அமைச்சரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்
ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி வழங்கணும் அமைச்சரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்
ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி வழங்கணும் அமைச்சரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஆக 24, 2025 12:42 AM
நாமக்கல் 'ஜவ்வரிசியின் விற்பனையை அதிகரிக்க, ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி வழங்க வேண்டும்' என, தமிழக அமைச்சர் அன்பரசனிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன், சேலம் சேகோ சர்வ் நிறுவனத்திற்கு வருகை தந்தார். அவரை, விவசாய முன்னேற்ற கழக மாநில பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன், தமிழக பால் உற்பத்தியாளர் நலச்சங்க மாநில செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில், அதிகளவில் மரவள்ளிக்கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது ஜவ்வரிசி விற்பனை விலை குறைந்துள்ளதால், மரவள்ளிக்கிழங்கு விலை கடுமையாக சரிவடைந்து, விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், ஜவ்வரிசியின் விற்பனையை அதிகரிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லுாரி, பள்ளி மாணவ, மாணவியர் விடுதிகள், சிறைச்சாலை மற்றும் பல்வேறு நிலைகளில் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில், ஜவ்வரிசி மூலம் தயாரிக்கப்பட்டு உணவு வகைள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், மாதந்தோறும் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசியுடன், இரண்டு கிலோ ஜவ்வரிசி வழங்க வேண்டும். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ளதுபோல், மத்திய அரசின் கிழங்கு ஆராய்ச்சி மையத்தை, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.