/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
/
பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : டிச 07, 2024 06:55 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குனர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா-வது:
நடப்பு ரபி பருவத்தில், பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த அரசாணை பெறப்பட்டுள்ளது. அதன்படி, அறி-விக்கை செய்யப்பட்ட பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்து பயன் பெறலாம். பயிர் காப்பீடு செய்ய, முன்மொழிவு படிவத்-துடன், அடங்கல், விதைப்பு சான்று, ஆதார் அட்டை நகல், சிட்டா நகல், வங்கி கணக்கு புத்தக நகல்
ஆகியவற்றுடன், பயிர் காப்பீடு கட்டணம் செலுத்தும் இடங்களான தேசிய மயமாக்கப்-பட்ட வங்கி கிளைகள், தொடக்க
வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்களிலும் பதிவு செய்யலாம்.சம்பா நெல்லுக்கு டிச., 16; நிலக்கடலைக்கு, டிச., 30; பருத்திக்கு, 2025 மார்ச், 17; கரும்புக்கு, 2025 மார்ச், 31; மரவள்ளி,
வாழைக்கு, 2025 பிப்., 28 இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபரங்க-ளுக்கு, நாமகிரிப்பேட்டை வட்டார வேளாண்மை
உதவி இயக்-குனர் அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.