/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சோலார் பவரை பயன்படுத்த விவசாயிகளுக்கு வேண்டுகோள்
/
சோலார் பவரை பயன்படுத்த விவசாயிகளுக்கு வேண்டுகோள்
ADDED : டிச 14, 2024 01:06 AM
நாமக்கல், டிச. 14-
'பகல் நேரத்தில் சோலார் பவர் மூலம் விவசாய மின் மோட்டார்களை இயக்க வேண்டும்' என, தமிழ்நாடு மின்சார வாரிய, கரூர் மண்டல தலைமை பொறியாளர்(பொ) சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: விவசாயிகள், பகல் நேரத்தில் இலவசமாக கிடைக்கும் புதுப்பிக்கக்கூடிய இயற்கை வளமான, சூரிய மின் ஆற்றலை பயன்படுத்தி, சோலார் மின் திட்டம் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் பசுமை ஆற்றல் திட்டங்களை ஊக்குவிப்பதோடு, மற்ற வளங்களை கொண்டு மின்னாற்றலை தயாரிக்கும்போது ஏற்படும் மாசுபாட்டின் அளவினை குறைக்க முடியும்.
நம் நாட்டை, பொருளாதார வளர்ச்சி பாதையில் முன்னேற்றிடும் நோக்கத்தில், பகலில் அதிக அளவில் தயாரிக்கப்படும் சோலார் பவர் மின்சாரத்தை, அனைத்து விவசாயிகளும் முழுமையாக பயன்படுத்தி, தங்களது விவசாய மின்மோட்டார்களை உபயோகப்படுத்தி தண்ணீர் இறைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.