/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பூக்கள் விலை சரிவு விவசாயிகள் கவலை
/
பூக்கள் விலை சரிவு விவசாயிகள் கவலை
ADDED : ஆக 10, 2025 12:46 AM
ப.வேலுார், ப.வேலுார், பிலிக்கல்பாளையம், சாணார்பாளையம், பரமத்தி, மோகனுார், உன்னியூர், கரூர் மாவட்டம், சேமங்கி, வேட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், குண்டுமல்லி, சம்பங்கி, அரளி பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
தினந்தோறும் பூக்களை அறுவடை செய்து, ப.வேலுார் பூ உற்பத்தியாளர் சங்கத்துக்கு கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். மல்லிகை, முல்லை போன்ற பூக்களின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், தேவை குறைந்ததால் விவசாயிகள், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.கடந்த வாரம், 800 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ குண்டுமல்லி, நேற்று, 440 ரூபாய், 220 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி, 150 ரூபாய், 700 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ முல்லை பூ, 360 ரூபாய், 250 ரூபாய்க்கு விற்ற அரளி, 160 ரூபாய்க்கு விற்பனையானது.