sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பைக்கும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து உடல் நசுங்கி தந்தை, மகள் பலி; மகன் படுகாயம்

/

பைக்கும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து உடல் நசுங்கி தந்தை, மகள் பலி; மகன் படுகாயம்

பைக்கும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து உடல் நசுங்கி தந்தை, மகள் பலி; மகன் படுகாயம்

பைக்கும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து உடல் நசுங்கி தந்தை, மகள் பலி; மகன் படுகாயம்


ADDED : பிப் 04, 2025 06:41 AM

Google News

ADDED : பிப் 04, 2025 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: பைக்கும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி தந்தை, மகள் உயிரிழந்தனர்; மகன் படுகாயமடைந்தார்.

திருச்சி மாவட்டம், தொட்டியம் கிடாரம் காட்டு சாலையை சேர்ந்-தவர் சிவசுப்ரமணியன், 51; லாரி டிரைவர். இவரது மகள் ஸ்ரீநிதி, 19; கோவை தனியார் கல்லுாரியில், முதலாமாண்டு படித்து வந்தார். மகன்

ஸ்ரீகார்த்திகேயன், 16, மோகனுார் தனியார் பள்-ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.இந்நிலையில்,

சிவசுப்ரம-ணியன், தன் மகள், மகனுடன், பழனி முருகன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு,

நேற்று முன்தினம் இரவு, 12:00 மணிக்கு கரூர் வந்தனர். அங்கிருந்து, 'ஸ்பிளண்டர் பிளஸ்' பைக்கில், மூவரும்

ஊருக்கு சென்றுகொண்டிருந்தனர். இதில் மூவரும், 'ஹெல்மெட்' அணியவில்லை. மோகனுார், கீழ்பாலப்-பட்டி

முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் லாரி டிரைவர் சர-வணன், 51; இவர், தேவகோட்டையில் இருந்து

வைக்கோல் லோடு ஏற்றிக்கொண்டு, நள்ளிரவு, 12:45 மணிக்கு, மோகனுார் - ப.வேலுார் சாலை, பி.டி.ஓ.,

அலுவலகம் அருகே துாக்க கலக்-கத்தில் வந்துள்ளார். அப்போது, பைக்கும், லாரியும் நேருக்கு நேர் மோதி

விபத்துக்குள்ளானது.

இதில், சிவசுப்ரமணியன், மகள் ஸ்ரீநிதி ஆகிய இருவரும், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக

உயிரிழந்தனர். படுகா-யமடைந்த ஸ்ரீகார்த்திகேயன், லாரி டிரைவர் சரவணன் ஆகிய இருவரையும், அக்கம்

பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, மாண-வரை கோவை தனியார் மருத்துவமனையிலும், லாரி டிரைவரை,

நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையிலும் சேர்த்-தனர். மோகனுார் போலீசார் விசாரணை நடத்தி

வருகின்றனர். கோவிலுக்கு சென்று திரும்பியபோது ஏற்பட்ட சாலை விபத்தில், தந்தை, மகள் பலியான

சம்பவம், உறவினர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us