/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பைக்கும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து உடல் நசுங்கி தந்தை, மகள் பலி; மகன் படுகாயம்
/
பைக்கும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து உடல் நசுங்கி தந்தை, மகள் பலி; மகன் படுகாயம்
பைக்கும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து உடல் நசுங்கி தந்தை, மகள் பலி; மகன் படுகாயம்
பைக்கும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து உடல் நசுங்கி தந்தை, மகள் பலி; மகன் படுகாயம்
ADDED : பிப் 04, 2025 06:44 AM
நாமக்கல்: பைக்கும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி தந்தை, மகள்
உயிரிழந்தனர்; மகன் படுகாயமடைந்தார். திருச்சி மாவட்டம், தொட்டியம் கிடாரம் காட்டு சாலையை சேர்ந்தவர் சிவசுப்ரமணியன், 51; லாரி டிரைவர்.
இவரது மகள் ஸ்ரீநிதி, 19; கோவை தனியார் கல்லுாரியில், முதலாமாண்டு படித்து வந்தார். மகன்
ஸ்ரீகார்த்திகேயன், 16, மோகனுார் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.இந்நிலையில், சிவசுப்ரமணியன், தன் மகள், மகனுடன், பழனி முருகன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம்
செய்துவிட்டு, நேற்று முன்தினம் இரவு, 12:00 மணிக்கு கரூர் வந்தனர். அங்கி-ருந்து, 'ஸ்பிளண்டர் பிளஸ்'
பைக்கில், மூவரும் ஊருக்கு சென்று-கொண்டிருந்தனர். இதில் மூவரும், 'ஹெல்மெட்' அணிய-வில்லை.
மோகனுார், கீழ்பாலப்பட்டி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் லாரி டிரைவர் சரவணன், 51; இவர்,
தேவ-கோட்டையில் இருந்து வைக்கோல் லோடு ஏற்றிக்கொண்டு, நள்-ளிரவு, 12:45 மணிக்கு, மோகனுார் -
ப.வேலுார் சாலை, பி.டி.ஓ., அலுவலகம் அருகே துாக்க கலக்கத்தில் வந்துள்ளார். அப்போது, பைக்கும், லாரியும்
நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், சிவசுப்ரமணியன், மகள் ஸ்ரீநிதி ஆகிய இருவரும், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக
உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஸ்ரீகார்த்திகேயன், லாரி டிரைவர் சரவணன் ஆகிய இருவரையும், அக்கம்
பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, மாணவரை கோவை தனியார் மருத்துவமனையிலும், லாரி டிரை-வரை,
நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையிலும் சேர்த்தனர். மோகனுார் போலீசார் விசாரணை நடத்தி
வருகின்-றனர். கோவிலுக்கு சென்று திரும்பியபோது ஏற்பட்ட சாலை விபத்தில், தந்தை, மகள் பலியான சம்பவம், உறவினர்கள்
மத்-தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.