/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளி வாகனம் மோதி மகளுடன் ஸ்கூட்டரில் சென்ற தந்தை பலி
/
பள்ளி வாகனம் மோதி மகளுடன் ஸ்கூட்டரில் சென்ற தந்தை பலி
பள்ளி வாகனம் மோதி மகளுடன் ஸ்கூட்டரில் சென்ற தந்தை பலி
பள்ளி வாகனம் மோதி மகளுடன் ஸ்கூட்டரில் சென்ற தந்தை பலி
ADDED : ஜூலை 25, 2025 01:29 AM
நாமக்கல், நாமக்கல்லில், தனியார் பள்ளி வாகனம் மோதிய விபத்தில் மகளுடன் ஸ்கூட்டரில் சென்ற தந்தை பலியானார்.
நாமக்கல்--திருச்சி சாலை ஆண்டவர் நகரை சேர்ந்த முத்து, 68, ஓய்வுபெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவர் நேற்று மதியம் எஸ்.கே.நகரில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு, தனது மகள் மாலதியுடன் சுவாமி தரிசனம் செய்ய சென்றார். பின்னர் அங்கிருந்து ஸ்கூட்டரில் இருவரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
மாலதி ஸ்கூட்டரை ஓட்டிச்செல்ல, முத்து பின்னால் அமர்ந்து வந்தார். எஸ்.கே.நகர் பிரிவு அருகே சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த தனியார் பள்ளி வாகனம் இவர்களது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் இருவரும் துாக்கி வீசப்பட்டனர்.
படுகாயமடைந்த முத்துவை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே இறந்தார். மாலதி லேசான காயங்களுடன் தப்பினார். நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.