/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அடிதடி வழக்கில் தந்தை, மகன் கைது
/
அடிதடி வழக்கில் தந்தை, மகன் கைது
ADDED : செப் 26, 2024 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் டவுன் பஞ்., பெரியகொல்லப்பட்டியை சேர்ந்-தவர் கணேசன், 57; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அண்-ணாதுரை, 55, என்பவருக்கும் இடையே சொத்து தகராறு உள்ளது.
கடந்த, 22ல் அண்ணாதுரை மற்றும் இவரது மகன் தமிழ்-செல்வன், 32 ஆகியோர், கணேசனிடம் வீட்டை காலி செய்யு-மாறு கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். தடுக்க சென்ற கணேசனின் மருமகன் ஜீவபாரதியையும் தாக்கியுள்-ளனர். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் ஜீவபாரதியை மீட்டு, திருச்செங்கோடு அரசு
மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து புகார்படி, மல்லசமுத்திரம் போலீசார், அண்ணாதுரை, தமிழ்செல்வனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.