/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசுப்பள்ளி அருகேமுட்புதரால் அச்சம்
/
அரசுப்பள்ளி அருகேமுட்புதரால் அச்சம்
ADDED : ஏப் 26, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம்:எலச்சிபாளையம் அருகே, மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மண்ணாடிபாளையம்,
சாயக்காடு, கொன்னங்காடு, கூத்தம்பூண்டி, சாலையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இவ்வழியை கடந்து தான் செல்லவேண்டும். முள் புதர் வளர்ந்து காணப்படுவதால், விஷஜந்துக்களால் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் கடந்து செல்கின்றனர். எனவே, அரசு பள்ளி அருகே, முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

