/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா

ADDED : ஜூன் 26, 2025 01:35 AM
நாமக்கல், வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு எடுத்து, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக வருவாய்த்துறை அலுவலர் சங்க தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். வி.ஏ.ஓ., சங்க தலைவர் லட்சுமி நரசிம்மன், கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை, நில அளவைத்துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களுக்கும், உயிர் மற்றும் உடைமைகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய பணி பாதுகாப்பு அளிக்க வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்கள் மீது தாக்குதல் நடக்கும் பட்சத்தில், குற்றவாளிகளுக்கு கடுமையான
தண்டனை வழங்க சிறப்பு பணிபாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும்.
அனைத்து நிலையிலான காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். ஆண்டுதோறும், ஜூலை, 1ம் நாளை வருவாய்த்துறை தினமாக அனுசரித்து, அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட, ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தர்ணா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தாலுகா, ஆர்.ஐ., வி.ஏ.ஓ., அலுவலகங்களில், அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டன.