/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்
/
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்
ADDED : மார் 15, 2024 03:45 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாமக்கல், சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களை உள்ளடக்கிய, சேலம் மண்டலத்தின் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல பொதுக்குழு கூட்டம் வரும், 17 மாலை 4:00 மணிக்கு நடக்கிறது. சேலம் மண்டல தலைவர் வைத்தியலிங்கம், சேலம் மாவட்ட தலைவர் பெரியசாமி ஆகியோர் தலைமை வகிக்கின்றனர்.
மாநில தலைவர் விக்கிரமராஜா பங்கேற்று, மே 5ம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும், 41வது மாநில மாநாடு குறித்து பேசுகிறார். மாநில பொதுச்செயலர் கோவிந்தராஜுலு, மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, மாநில தலைமை செயலாளர் ராஜ்குமார், மாநில கூடுதல் செயலாளர் ராஜசேகரன், மாநில செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். இதில் பல்வேறு தொழில் அமைப்புகளை சார்ந்த, 135 இணைப்பு சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.
வணிகர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான அச்சுறுத்தல்கள், சட்ட முரண்பாடுகள், அதிகார அத்துமீறல்கள், நகராட்சி பிரச்னைகள், ஜி.எஸ்.டி., மற்றும் உணவு பாதுகாப்பு சட்டம் போன்றவற்றில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக கலந்தாலோசிக்க இருப்பதால், நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

