/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நிதி நிறுவன அதிபருக்கு நள்ளிரவில் கத்திக்குத்து: மர்ம நபர்கள் 'வெறி'
/
நிதி நிறுவன அதிபருக்கு நள்ளிரவில் கத்திக்குத்து: மர்ம நபர்கள் 'வெறி'
நிதி நிறுவன அதிபருக்கு நள்ளிரவில் கத்திக்குத்து: மர்ம நபர்கள் 'வெறி'
நிதி நிறுவன அதிபருக்கு நள்ளிரவில் கத்திக்குத்து: மர்ம நபர்கள் 'வெறி'
ADDED : ஜூலை 31, 2025 02:01 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, நிதி நிறுவன அதிபரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே அக்ரஹாரம் அடுத்த குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் கமலகண்ணன், 43; நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு, குடும்பத்தினருடன் வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தார். அப்போது, 'ஆம்னி' காரில் வந்த மர்ம நபர்கள் மூவர், கமலகண்ணன் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். சத்தம் கேட்டு எழுந்த கமலகண்ணன், கதவை திறந்து வெளியே வந்துள்ளார்.
அப்போது, இரண்டு பேர் கமலகண்ணணின் கையை பிடித்துக்கொண்டனர். மற்றொருவர் மறைத்து எடுத்து வந்த கத்தியால், கமலகண்ணின் கழுத்து உள்ளிட்ட இடத்தில் சரமாரியாக குத்தியுள்ளனர். வலியால் துடித்த கமலகண்ணனில் சத்தம்கேட்டு வீட்டில் உள்ளவர்கள் எழுந்து வருவதற்குள், மர்ம நபர்கள் மூவரும் காரில் ஏறி தப்பிச்சென்றனர்.படுகாயமடைந்த கமலகண்ணனை மீட்டு, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த பள்ளிப்பாளையம் போலீசார், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.