/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம்
/
'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம்
ADDED : பிப் 01, 2024 11:10 AM
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் உமா, தாளம்படி பஞ்., சமுதாய கூடத்தில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட கூடிய ஆய்வு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
நவணி தோட்டக்கூர்பட்டி பஞ்., தொடக்கப்பள்ளியில், முதல்வரின் காலை உணவு திட்டத்தில் பயன்பெற்று வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தவர், செல்லப்பம்பட்டி ஒன்றிய தொடக்க பள்ளியில் மாணவ, மாணவியருடன் அமர்ந்து உணவு
அருந்தினார்.
நாமக்கல் நகராட்சி
அலுவலகத்தில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் பல்வேறு துறை சார்ந்த
அலுவலர்கள் மேற்கொண்ட கள ஆய்வு குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
தமிழக அரசின் சேவைகள், நலத்திட்டங்கள், தங்குதடையின்றி பொதுமக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும், நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை ஏற்படுத்திடும் நோக்கிலும், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து விரைந்து தீர்வு காண வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, எம்.எல்.ஏ., ராமலிங்கம் முன்னிலையில், நாமக்கல் பி.டி.ஓ., அலுவலகத்தில், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். டி.ஆர்.ஓ., சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, ஆர்.டி.ஓ., சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.