ADDED : ஜூலை 02, 2026 04:46 AM
அ நிறம் | அளவு
குமாரபாளையம்:குமாரபாளையத்தில்
போக்குவரத்து நெரிசல் காரணமாக, கனரக வாகனங்கள் நகரில் நுழைய நேரம்
ஒதுக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக எச்சரிக்கை பலகை, நகரில்
உள்ளே நுழையும் இடங்களான கத்தேரி பிரிவு, கோட்டைமேடு பிரிவு,
பள்ளிப்பாளையம் சாலை, மேம்பாலம் எஸ்.எஸ்.எம்., பள்ளி பிரிவு, காவிரி
பாலம் பிரிவு, பஸ் ஸ்டாண்ட் பகுதி ஆகிய, ஆறு இடங்களில்
வைக்கப்பட்டுள்ளது. மேலும், காலை, 7:00 மணி முதல் மதியம், 12:00 மணி,
மாலை, 4:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை கனரக வாகனங்கள், நகர
எல்லைக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் அபராதம்
விதிக்கப்படும் என, குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால், இதையும் மீறி நகரில் நுழைந்த சாம்பல் லோடு லாரிக்கு, நேற்று 1,000 ரூபாயை, போக்குவரத்து போலீசார் அபராதமாக விதித்தனர்.
