நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, மோர்பாளையம் வாரச்சந்தை வளாகத்தில் உள்ள குப்பை கிடங்கில், நேற்று மாலை தீ பற்றியது.
திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகரன் தலைமையிலான வீரர்கள், அரைமணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். அருகிலிருந்த வள்ளுவர் நகரை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறின. யாராவது பீடி, சிகரெட்டை வீசியதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.

