/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பி.ஜி.பி.,கலை அறிவியல் கல்லுாரியில் தீயணைப்பு விழிப்புணர்வு பயிற்சி

ADDED : ஆக 01, 2025 01:53 AM
நாமக்கல், நாமக்கல், கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, பி.ஜி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் தேசிய மாணவர் படை நடத்திய மாணவர்களுக்கான தீயணைப்பு விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.
கல்லுாரி தலைவர் பழனி. ஜி.பெரியசாமி, துணைத் தலைவர் விசாலாட்சி பெரியசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். முதல்வர் கலைமணி வரவேற்றார். தாளாளர் கணபதி, முதன்மையர் முனைவர் பெரியசாமி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் தீயினால் ஏற்படும் விபத்துகளின் பாதுகாப்பு அவசியம் குறித்து பேசினர்.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தீயணைப்பு ஆய்வாளர் நல்ல துரை மற்றும் அவரது துறை வீரர்கள் மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் தீ விபத்து ஏற்படும் போது அதை பாதுகாப்பாக அணைக்கின்ற வழிமுறைகளை செய்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் கார்த்திக்ராஜா நன்றி கூறினார். அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.