ADDED : ஏப் 19, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை தீயணைப்பு நிலையம் சார்பில், தீ தொண்டு நாளையொட்டி, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், தீயணைப்பு வீரர்கள், பொது மக்களிடம், சமையல் செய்து முடித்தவுடன் காஸ் அடுப்பின் ரெகுலேட்டரை அணைக்க வேண் டும்.
மின்சார தீ விபத்து ஏற்படாமல் இருக்க, தரமான மின் உபகரணங்களையும், ஒயர்களையும் பயன்படுத்த வேண்டும். வெளியூர் செல்லும்போது, குடியிருப்புகளின் மெயின் ஸ்விட்சை ஆப் செய்ய வேண்டும் என, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

