/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேசிய வங்கியில் தீ தடுப்பு ஒத்திகை
/
தேசிய வங்கியில் தீ தடுப்பு ஒத்திகை
ADDED : ஜூன் 30, 2024 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்,று தீ விபத்தை தடுப்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
ராசிபுரம், பாரத ஸ்டேட் வங்கியில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி, நேற்று நடந்தது. வங்கி துணை மேலாளர் நல்லதுரை தலைமை வகித்தார். சேப்டி இன்ஜினியர் ரவிச்சந்திரன், தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி காட்டினார்.
மின் கசிவால் ஏற்படும் தீ விபத்து, எல்.பி.ஜி., தீ விபத்து, மண்ணெண்ணெய் தீ விபத்து ஏற்பட்டால் அதனை தீயணைப்பான் அல்லது வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எவ்வாறு அணைக்க வேண்டும் என, செயல்முறை விளக்கமளித்தனர். வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.