/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு விழிப்புணர்வு
/
அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு விழிப்புணர்வு
ADDED : ஏப் 26, 2025 01:08 AM
ராசிபுரம்:ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. எம்.ஓ., கலைச்செல்வி தலைமையில் டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
'
இதில், உயர் வெப்ப அலை காலங்களில் எவ்வாறு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால், அலுவலர்கள், பணியாளர்கள் ஒன்றிணைந்து எவ்வாறு தீயை அணைப்பது.
மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளை பாதுகாப்பாக எவ்வாறு வெளியே கொண்டு வருவது, முதலுதவி சிகிச்சை செய்வது, அவர்களுக்கு ஆறுதல் அளிப்பது மற்றும் உயிர் சேதம், பொருட்சேதம் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, செயல்விளக்கம் மூலம் விளக்கமளித்தனர். ராசிபுரம் நிலைய அலுவலர் பலகார ராமசாமி மற்றும் பணியாளர்கள் செய்து காண்பித்தனர்.

