/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு விழிப்புணர்வு
/
அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு விழிப்புணர்வு
ADDED : நவ 19, 2025 02:08 AM
ராசிபுரம், சிபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், நேற்று தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மருத்துவமனைகள், வீடுகளில் ஏற்படும் தீ விபத்துகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து எவ்வாறு தடுப்பது; தீயில் பாதிக்கப்பட்டவர்களை
எவ்வாறு காப்பாற்ற வேண்டும்; முதலுதவி செய்வது; தீ விபத்து ஏற்பட்டவுடன் தீயணைப்பு துறை எவ்வாறு உதவிக்கு அழைப்பது என்பது குறித்து விழிப்புணர்வு
ஏற்படுத்தினர்.
மேலும், தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி வடகிழக்கு பருவமழை முன்னிட்டு, மழைக்காலங்களில் ஏற்படும் இடி, மின்னல், மழை, காற்று போன்ற காலங்களில் தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் எவ்வாறு முன்னெச்சரிக்கையாக பாதுகாப்புடன் இருப்பது என்பது குறித்தும் விளக்கினர்.

