/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அங்கன்வாடி பணியாளர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
அங்கன்வாடி பணியாளர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
அங்கன்வாடி பணியாளர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
அங்கன்வாடி பணியாளர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூலை 24, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் வட்டாரத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், பள்ளிப்பாளையம் வட்டாரத்தில் உள்ள அங்கன்வாடி பணியாளர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு, மற்றும் செயல்விளக்க நிகழ்ச்சி ஆவாரங்காடு
பகுதியில் உள்ள நகராட்சி மண்டபத்தில், நேற்று நடந்தது.
வெப்படை தீயணைப்பு நிலைய வீரர்கள், தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வும், சமையல் செய்யும்போது காஸ் கசிவு மற்றும் தீவிபத்து ஏற்பட்டால் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து, நேரடி செயல்விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள், 47 பேர் கலந்துகொண்டனர்.