ADDED : பிப் 03, 2024 03:59 AM
அ நிறம் | அளவு
பள்ளிப்பாளையம்: சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், வட்டார போக்குவரத்து அலுவலர் பூங்குழலி தலைமையில், தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று நடந்தது. குமாரபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெய்சந்திரன் மற்றும் வீரர்கள், தீ தடுப்பு, தீ விபத்து நடந்தால் எப்படி தப்பிப்பது, காஸ் தீ விபத்து தடுப்பது, முதலுதவி, தீ விபத்தில் சிக்கியவரை எப்படி காப்பாற்றுவது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து, செயல் விளக்கத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போக்குவரத்து ஆய்வாளர் சிவகுமார், பொதுமக்கள், வாகன
ஓட்டிகள் கலந்து கொண்டனர்.
