/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரம் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு செயல்முறை விளக்கம்
/
ராசிபுரம் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு செயல்முறை விளக்கம்
ராசிபுரம் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு செயல்முறை விளக்கம்
ராசிபுரம் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு செயல்முறை விளக்கம்
ADDED : டிச 01, 2024 01:28 AM
ராசிபுரம் அரசு மருத்துவமனையில்
தீ தடுப்பு செயல்முறை விளக்கம்
ராசிபுரம், டிச. 1--
ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அதிகாரி பலகார ராமசாமி தலைமையில் தீயணைப்பு படையினர், செயல்முறை விளக்கம் அளித்தனர். மருத்துவ அலுவலர் கலைச்செல்வி தலைமை வகித்தார். இதில், தீ விபத்து காலங்களில் எவ்வாறு வேகமாக செயல்படுவது; தீயணைப்பு கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது; நோயாளிகளை விபத்து பகுதியில் இருந்து எவ்வாறு பாதுகாப்பது.
அவர்களை எவ்வாறு இடிபாடுகளில் இருந்து வெளியே கொண்டு வருவது; மின் சாதனங்களை தீ விபத்து சமயத்தில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனர். மேலும், தீ விபத்து காலங்களில் ஊழியர்களின் கடமை மற்றும் பணி ஆகியவை குறித்து அறிவுரை வழங்கினர். மழைக்காலத்தில் எவ்வாறு எச்சரிக்கையாக நடந்து கொள்வது என்பது குறித்தும் செயல்விளக்கம் அளித்தனர். டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.