/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அங்காளம்மன் கோவிலில் தீ மிதி விழா
/
அங்காளம்மன் கோவிலில் தீ மிதி விழா
ADDED : மார் 11, 2024 11:45 AM
ராசிபுரம்: ராசிபுரத்தில் வரலாற்று சிறப்புமிக்க அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் சிவராத்திரியையொட்டி, தீ மிதி விழா நடப்பது வழக்கம். இந்தாண்டுக்கான சிவராத்திரி விழா, கடந்த வாரம் தொடங்கியது. அன்று முதல் தினமும் இரவு, அம்மன் பல்வேறு அலங்காரத்தில் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு, மஹா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து, நேற்று காலை, தீ மிதி விழா நடந்தது. இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர். முன்னதாக பூசாரிகள் பூஜை கூடை, பொருட்களுடன் தீ மிதித்தனர். பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த குழந்தைகள், தீ சட்டியுடன் தீ மிதித்தனர்.
பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை மயான கொள்ளை நிகழ்ச்சி நடக்கிறது. முத்துக்காளிப்பட்டியில் உள்ள மாசாணி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஆடு, கோழிகள் காவு கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கும். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

