தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பா.ஜ., சார்பில் இன்று தீப்பந்த போராட்டம்

பா.ஜ., சார்பில் இன்று தீப்பந்த போராட்டம்

பா.ஜ., சார்பில் இன்று தீப்பந்த போராட்டம்


ADDED : நவ 27, 2026 06:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2026 06:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராசிபுரம்;'திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்துாணில், தீபம் ஏற்றாததை கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று (27ம் தேதி) பா.ஜ., சார்பில் தீப்பந்த போராட்டம் நடக்கிறது' என, அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:

கார்த்திகை தீபத் திருநாளான நவ., 24-ம் தேதி திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்துாணில் கோவில் நிர்வாகம் சார்பில், தீபம் ஏற்ற வேண்டும் என, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த்குமார், விபுல் பஞ்சோலி அமர்வு கடந்த, 20-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.ஆனால் நவ., 24-ம் தேதி மாலை, 5:30 மணி வரை தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் மதுரை கலெக்டர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்காமல் ஏமாற்றினர். மாலை, 6:00 மணிக்கு உச்சநீதிமன்ற உத்தரவை மீறி தீபத்துாணில் தீபம் ஏற்றாமல், தமிழக மக்களின் உணர்வையும், முருக பக்தர்களையும் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு புண்படுத்தியுள்ளது.

மேலும், திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் திரண்டிருந்த முருக பக்தர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல், இந்து மக்களை ஏமாற்றும் முதல்வர் விஜயை கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று, தீப்பந்த போராட்டத்தை, தமிழ்நாடு பா.ஜ., நடத்துகிறது.

தமிழகம் முழுவதும், 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.

ஒன்றியம், டவுன் பஞ்சாயத்து, நகரம், பெருநகரம் மற்றும் மாவட்ட தலைநகரம் ஆகியவற்றை நோக்கி இன்று காலை, 10:00 மணிக்கு, பா.ஜ.,வின் இருவண்ண கொடியை ஏந்தி, தீப்பந்த போராட்டம் நடக்கிறது. இவ்வாறு அவர்

கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us