/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கே.எஸ்.ஆர்., இன்ஜி., கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா
/
கே.எஸ்.ஆர்., இன்ஜி., கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா
கே.எஸ்.ஆர்., இன்ஜி., கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா
கே.எஸ்.ஆர்., இன்ஜி., கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா
ADDED : ஆக 21, 2025 02:24 AM
திருச்செங்கோடு, ருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., இன்ஜினியரிங் கல்லுாரியில், 25ம் ஆண்டாக, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவக்க விழா நடந்தது. கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனங்களின் சேர்மன் சீனிவாசன் தலைமை வகித்தார். கணினி அறிவியல் துறை, மூன்றாம் ஆண்டு மாணவி ஹர்ஷவர்த்தினி வரவேற்றார்.
கல்லுாரி டீன் வெங்கடேசன், முதல்வர் மீனாட்சி தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொலைக்காட்சி தொகுப்பாளரும், மேடை பேச்சாளருமான ஆவுடையப்பன், கவுரவ விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசுகையில், ''மாணவ, மாணவியர், இந்த நான்கு ஆண்டுகளில் நல்ல தன்முனைப்பு, நல்ல நண்பர்கள், சொந்த நுண்ணறிவு என்ற, மூன்று மந்திரங்களை பின்பற்றி முன்னேற்றம் காண வேண்டும்,'' என்றார். போபால் லீகல் புரொடக்ஷன் தலைமை அதிகாரி செந்தில்குமார் மூர்த்தி, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அவர், ''மாணவர்கள், கல்லுாரி பாடத்திட்டங்களுக்கு அப்பாற்பட்டு விளையாட்டு, என்.சி.சி., என்.எஸ்.எஸ்., போன்றவற்றில் கலந்துகொண்டு திறமையை மேம்படுத்திக்கொள்ளுங்கள்,'' என பேசினார்.
கல்லுாரி நிர்வாக அதிகாரி மோகன், கணினி அறிவியல் துறை மூன்றாமாண்டு மாணவர் சந்திரபிரதீப், இயக்குனர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.