/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பி.ஜி.பி., வேளாண் கல்லுாரியில் முதலாண்டு வகுப்பு துவக்க விழா
/
பி.ஜி.பி., வேளாண் கல்லுாரியில் முதலாண்டு வகுப்பு துவக்க விழா
பி.ஜி.பி., வேளாண் கல்லுாரியில் முதலாண்டு வகுப்பு துவக்க விழா
பி.ஜி.பி., வேளாண் கல்லுாரியில் முதலாண்டு வகுப்பு துவக்க விழா
ADDED : செப் 19, 2025 01:47 AM
நாமக்கல் :நாமக்கல் பி.ஜி.பி., வேளாண் அறிவியல் கல்லுாரியில், முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது. பி.ஜி.பி., குழும தலைவரும், நிறுவனருமான பழனி ஜி பெரியசாமி தலைமை வகித்தார். ஆசிரியர் ஆலோசகர் பிருந்தா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கோபால் முன்னிலை வகித்தார்.
தாளாளர் கணபதி, மாணவர்கள் கல்வி, ஒழுக்கம், விளையாட்டு முதலியவற்றில் முன்னிலை வகிப்பது எப்படி; வேளாண் அறிவியல் படித்த மாணவர்கள், எவ்வாறு மத்திய, மாநில அரசு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர் என்பது குறித்து பேசினார்.
தொடர்ந்து, கல்லுாரி துணை முதல்வர் ஸ்ரீனிவாசன், கல்லுாரியின் விதிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். துறை தலைவர்கள் அனைவரும் வாழ்த்தி பேசினர். துவக்க விழாவில், முதலாமாண்டு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் ரகுநாத், முனைவர் சுஜித்ரா ஆகியோர் நன்றி தெரிவித்தனர்