/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
செல்வம் தொழில்நுட்ப கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா
/
செல்வம் தொழில்நுட்ப கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா
செல்வம் தொழில்நுட்ப கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா
செல்வம் தொழில்நுட்ப கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா
ADDED : செப் 07, 2025 12:45 AM
நாமக்கல், நாமக்கல் செல்வம் தொழில்நுட்ப கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவக்க விழா நடந்தது. செல்வம் கல்வி நிறுவனங்களின் தலைவரும், செல்வம் குழும நிர்வாக இயக்குனருமான பாபு, செல்வம் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் ஜெயம் செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். செயலாளர் கவித்ரா நந்தினி, செயல் இயக்குனர் கார்த்திக் சிறப்புரையாற்றினார்.
கல்லுாரி முதல்வர் ராமபாலன் தொகுப்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக, கல்லுாரியில் பல்வேறு துறைகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்கள், கல்லுாரியின் சிறப்பம்சம், கல்லுாரி தங்கள் வாழ்க்கையை உருவாக்குவதில் எவ்வாறு முக்கிய பங்கு வகித்தது என்பது குறித்து விளக்கினர்.
மேலும், மாணவர்கள் கல்லுாரி வழங்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, தெரிவித்தனர். விழாவில், தேர்வு கட்டுப்பாட்டாளர், பல்வேறு துறை தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.