/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருச்செங்கோட்டில் மீன் பிடிஏலம்; இரு பிரிவினர் மனு
/
திருச்செங்கோட்டில் மீன் பிடிஏலம்; இரு பிரிவினர் மனு
திருச்செங்கோட்டில் மீன் பிடிஏலம்; இரு பிரிவினர் மனு
திருச்செங்கோட்டில் மீன் பிடிஏலம்; இரு பிரிவினர் மனு
ADDED : ஏப் 23, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செங்கோடு,:திருச்செங்கோடு ஒன்றியம், எஸ்.இறையமங்கலம் பஞ்சாயத்து, கோரக்குட்டை ஏரியில் மீன் பாசி குத்தகை ஏலம் நடைபெற இருந்த நிலையில், கோரக்குட்டை பகுதி மக்கள், இரு பிரிவுகளாக பிரிந்து திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.
அதில், ஒரு பிரிவினர் 40 ஆண்டுகளாக மீன் பிடித்து வருவதாகவும் பொது ஏலம் விடப்பட்டதில்லை எனவும், ஒரு பிரிவினர் பொது ஏலம் விட வேண்டும் எனவும் தெரிவித்து மனு கொடுத்த காரணத்தால், தற்காலிகமாக பொது ஏல தேதி தள்ளி போடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இரு பிரிவு மக்கள் கலைந்து சென்றனர்.