/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் எதிரொலி மோகனுாரில் 'பேரிகார்டு' அமைத்து பொதுமக்கள் தடுப்பு

ADDED : ஜூலை 29, 2025 01:29 AM
மோகனுார், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ளதால், மோகனுார் பகுதியில், 'பேரிகார்டு' அமைத்து, ஆற்றில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தென்மேற்கு பருவ மழையால், கர்நாடகா அணைகளில் நீர்வரத்து அதிகரித்து, கபினி, கே.ஆர்.எஸ்., நிரம்பியது. இதையடுத்து, அந்த அணைகளுக்கு வந்த உபரி நீர் முழுமையாக காவிரி
யாற்றில் வெளியேற்றப்பட்டது. அதன்படி, இரு அணைகளில் இருந்தும், ஒரு லட்சம் கனஅடி உபரிநீர், காவிரியில் பெருக்கெடுத்துள்ளது. மேட்டூர் அணையில் நீர்மட்டம், 120 அடி ஏற்கனவே நிரம்பியதை அடுத்து, பாசனம் மற்றும் உபரியாக, 25,000 கனஅடி நீர் திறந்து
விடப்பட்டது.
இந்நிலையில், படிப்படியாக உயர்த்தப்பட்டு, நேற்று முன்தினம், ஒரு லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில், குமாரபாளையம், பள்ளிப்பாளையம், ஜேடர்
பாளையம், ப.வேலுார் மற்றும் மோகனுார் ஆகிய பகுதிகளில், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை
யாக இருக்கவும், பாதுகாப்பான இடங்களில் தங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மோகனுார் டவுன் பஞ்., நிர்வாகம் சார்பில், காவிரி படித்துறையில் ஆற்றில் குளிப்பதற்கு தடை விதித்து, எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும், 'நிறைய புதைகுழிகள், சுழல்கள் உள்ளதால் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, கால்நடைகளை அழைத்து செல்லவோ, துணி துவைக்கவோ வேண்டாம்' என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவற்றை பொருட்படுத்தாமல், ஆபத்தை உணராமல் சிலர் ஆற்றில் இறங்கி குளிக்கின்றனர். அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், வருவாய்த்துறை, காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.