/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் மலர் தொடுக்கும் பணி மும்முரம்
/
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் மலர் தொடுக்கும் பணி மும்முரம்
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் மலர் தொடுக்கும் பணி மும்முரம்
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் மலர் தொடுக்கும் பணி மும்முரம்
ADDED : ஏப் 27, 2025 03:59 AM
மல்லசமுத்திரம்: அமாவாசையையொட்டி, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சிறப்பு பூஜைக்காக, பக்தர்களால் மலர்கள் தொடுக்கும் பணி மும்-முரமாக நடந்தது.
சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையில், பிரசித்திபெற்ற காளிப்-பட்டி கந்தசாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, தைப்பூசம், பங்குனி உத்திரம், அமாவாசை, சஷ்டி, கிருத்திகை, பவுர்ணமி தினங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு மாவட்டத்தினர் மட்டுமின்றி, வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.அதன்படி, இன்று சித்திரை மாத அமாவாசையைொட்டி, கோவில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்வதற்-காக, பக்தர்களால் மலர்கள் தொடுக்கும் பணி முழுவீச்சில் நடந்-தது.
ஓசூர், ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மஞ்சள் சாமந்தி, வெள்ளை சாமந்தி, ஆஸ்திரேலியா வயலட் ரோஜா, ஆரஞ்சு செண்டுமல்லி, மஞ்சள் செண்டுமல்லி உள்ளிட்ட பூக்களை, பக்தர்கள் மாலையாக தொடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

