நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார், ப.வேலுார், பிலிக்கல்பாளையம், சாணார்பாளையம், பரமத்தி, கரூர் மாவட்டம் சேமங்கி, வேட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை, சம்பங்கி, சாமந்தி, அரளி பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றை விவசாயிகள் அறுவடை செய்து, ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்திற்கு தினமும் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
அதன்படி, நேற்று நடந்த ஏலத்தில், கடந்த வாரம், 440 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ குண்டுமல்லி, நேற்று, 920 ரூபாய், 150 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி, 220 ரூபாய், 160 ரூபாய்க்கு விற்ற அரளி, 200 ரூபாய், 150 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி, 250 ரூபாய், 350 ரூபாய்க்கு விற்ற முல்லை, 800 ரூபாய்க்கும் விற்பனையாகின. சுப முகூர்த்த நாட்களால், பூக்கள் விலை உயர்ந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.