ப.வேலுார்: ப.வேலுார் தாலுகாவில், பிலிக்கல்பாளையம், சாணார்பாளையம், ப.வேலுார், பரமத்தி, மோகனுார், உன்னியூர், கரூர் மாவட்டம் சேமங்கி, வேட்ட மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், குண்டு மல்லி, சம்பங்கி, செவ்வந்தி, அரளி, முல்லை பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பூக்கள், ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்தில் வைத்து ஏலம் விடப்படுகிறது.
தீபாவளியை முன்னிட்டு, நேற்று நடந்த ஏலத்தில், பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த வாரம், 400 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ குண்டுமல்லி, நேற்று கிலோ, 1,600 ரூபாய்க்கு விற்றது.
இதேபோல், 40 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி, 100 ரூபாய், 60 ரூபாய்க்கு விற்ற அரளி, 200 ரூபாய்; 400 ரூபாய்க்கு விற்ற முல்லைப்பூ, 1,500 ரூபாய்; 40 ரூபாய்க்கு விற்ற செவ்வந்தி பூ, 200 ரூபாய்க்கும் விற்பனையானது. தீபாவளியை முன்னிட்டு நடந்த ஏலத்தில், பூக்கள் விலை உயர்வால், பூ விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.