/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு கோலாகலம்
/
மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு கோலாகலம்
ADDED : அக் 22, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார், வெண்ணந்துார் ஒன்றியம், ஆர்.புதுப்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் நடந்து வருகிறது.
அதேபோல் இந்தாண்டும் வழக்கம்போல் மாரியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பூச்சாட்டு விழாவில், பக்தர்கள் அம்மனுக்கு பூக்களை ஊரின் முக்கிய விதி வழியாக கொண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.அப்போது, அம்மன் மலர்களின் குவியலில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான மக்கள் கலந்து கொண்டனர்.