ADDED : ஜூன் 09, 2025 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: உலக உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி, புதுச்சத்திரம் அருகே உள்ள பாவை கல்லுாரியில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்-தது.
உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் தலைமை வகித்தார். இதில், உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், அசோக்குமார், கோகுல், லோகநாதன் ஆகியோர் முன்-னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், கல்லுாரி மாணவ, மாணவிய-ருக்கு பாதுகாப்பான உணவு பழக்கங்களை ஊக்குவித்தல், பொது சுகாதார விழிப்புணர்வு, உணவு முறைகளை கையாளுதல், துரித உணவு பழக்கங்கள் மூலம் உடலுக்கு ஏற்படும் தீமை குறித்து விளக்கமளித்தனர். தொடர்ந்து, கல்லுாரி மாணவர்களுக்கு விழிப்-புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒன்றிணைவோம் உணவு பாது-காப்பை உறுதி செய்வோம் என்ற உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.